காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இலங்கை கடலோரம் முதல் வடதமிழகம் வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் குமரிக்கடலில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.