வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது குமரிக்கடல், மாலத்தீவு வரை நீடிக்கிறது என்றும், இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.