தமிழகம் முழுவதும் இன்று காணும் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தைத் திங்கள் மூன்றாம் நாளான இன்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. கோயில்கள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் உறவினர்களின் இல்லங்களுக்கு சென்று பொதுமக்கள் காணும் பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர். காணும் பொங்கலை முன்னிட்டு, கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் இப்போதே களை கட்டத் தொடங்கி உள்ளன. பேருந்துகள், ரயில் நிலையங்களில் மக்கள் குவிந்துள்ளனர். மேலும், பல பகுதிகளில் வீர விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு, மெரீனா கடற்கரை மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.