தமிழ்நாட்டில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பகல் நேரங்களில் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாட்டில் இன்று முதல், இரவு ஊரடங்கு அமலாகவுள்ள நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பகல் நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இன்று முதல், இரவு நேர ஊரடங்கு அமலாகிறது.

வெளியூர் செல்லும் பயணிகள், பகல் நேரங்களில் பயணத்தை மேற்கொள்கிறனர்.

இதனால், கோயம்பேடு பேருந்து நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தமாக வைக்கப்படுகிறது.

மேலும், உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் கிருமி நாசினிகள் கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகு பயணிகள் பேருந்துகளில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் முகக்கவசம் அணிவதும் கட்டயமாக்கப்பட்டுள்ளது.

அரசின் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பேருந்து பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version