மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே வல்லாளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கிடாரிபட்டி, திருவாதவூர், அழகர்கோவில், கொட்டாம்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.