தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை -அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு இல்லை என்றும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சுகாதராதத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அனைத்து மாவட்ட அதிகாரிகளுடன், காணொலி மூலம் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றார். கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

Exit mobile version