தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்

தமிழக சட்டப்பேரவையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று நடைபெறுகிறது.

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இன்று, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. விவாதத்திற்குப் பின்னர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிடவுள்ளார்.

Exit mobile version