தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அரசு விண்ணப்பம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கோரி அரசு விண்ணப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட, நூற்றிற்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 6 புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும், கிருஷ்ணகிரி , நாகப்பட்டினம் , திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் புதிய மருத்துவகல்லூரிகள் தொடங்க அனுமதி கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version