தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு

தமிழகத்தில் இன்று 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தேர்தலில் எட்டு வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததையடுத்து அந்த வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் இந்த வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அய்யம்பட்டி வாக்குச்சாவடியை மாவட்ட ஆட்சியர் மலர்விழி ,தேர்தல் பொது பார்வையாளர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். வாக்குசாவடிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Exit mobile version