தமிழகத்தில் 11க்கும் மேற்பட்ட இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது. திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. அந்தமான் பகுதியில் ஏற்கனவே தென்மேற்கு பருவமழை துவங்கி விட்ட நிலையில் கேரளாவில் விரைவில் துவங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக குளிர்பானங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.