தமிழகத்தில் விலங்குகள் நலவாரியம் அமைப்பதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தை, தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்த, விலங்குகள் நல வாரியம் அமைக்கவும், வாரியம் எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த, நிர்வாகக் குழு ஏற்படுத்தவும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான அரசாணை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, விலங்குகள் நல வாரியத்தின் தலைவராக, முதலமைச்சர் பழனிசாமியும், துணைத் தலைவராக, கால்நடைத் துறை அமைச்சரும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு துறை செயலர்கள் உள்ளிட்ட, 12 பேர் உறுப்பினர்களாகவும், நிர்வாகக் குழுத் தலைவராக, கால்நடைத் துறை முதன்மை செயலர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் நல வாரியத்திற்கான விதிமுறைகள், குழுவின் பணிகள் குறித்த விபரங்கள், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.