நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாடக் கட்டுப்பாடுகள்

நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டம் இரவு 1 மணிக்கு மேல் நீடிக்கக் கூடாது என்பது உட்படப் பல்வேறு கட்டுப்பாடுகளைச் சென்னை மாநகரக் காவல்துறை விதித்துள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டுச் சென்னை முழுவதும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள துணை ஆணையர்கள் தலைமையில், நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நட்சத்திர விடுதிகளில், இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை விடுதிகள் இயங்கலாம் எனவும், நீச்சல் குளத்தின் மீது எந்தவித கொண்டாட்டங்களிலோ அல்லது கேளிக்கை விருந்துகளிலோ ஈடுபடக் கூடாது எனவும் சென்னை மாநகரக் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரக்கூடிய நபர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லும் வரை கண்காணிக்க வேண்டும் எனவும், நள்ளிரவு 1 மணிக்குள் மேல் மது விருந்து கொண்டாட்டங்களை அனுமதிக்கக்கூடாது எனவும் மாநகரக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version