வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ,தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 6 சென்டி மீட்டர் மழையும், இளையான்குடி, திருத்துறைப்பூண்டி, சூலூர் ஆகிய இடங்களில் 5 சென்டி மீட்டர் மழையும், உத்தமபாளையத்தில் 4 சென்டி மீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.