சிங்கப்பூரில் மக்கள்தொகை 5.7மில்லியனாக உயர்ந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
மக்கள் தொகை என்ற வார்த்தையை கேட்டாலே அனைவருக்கும் சீனா, இந்தியா தான் ஞாபகம் வரும்.ஆனால் மற்ற நாடுகளிலும் ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை உயர்ந்துக்கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை. இந்த வரிசையில் சிங்கப்பூரின் மக்கள் தொகை பற்றிய தகவலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரில், கடந்த ஆண்டு 0.8 சதவீதமாக மக்கள் தொகை இருந்தது. அதில் 5,30,000 பேர் நிரந்தரமாக வசிக்க குடியுரிமை பெற்றவர்கள். இந்த ஆண்டு மக்கள் தொகை 1.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வுக்கு காரணம், வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை அதிரிகத்ததால் தான் மக்கள் தொகை உயர்ந்துள்ளது என அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.
சிங்கப்பூரில், தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்கள் மட்டும் 61.6 சதவீதம் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.