சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. சேலம் வாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு மற்றும் உறுதிபடுத்தும் இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த இயந்திரங்கள் அனைத்து கட்சியினர் முன்னிலையில் சேலம் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இந்தப் பணி நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி சேலம் மாவட்டத்தில் இது வரை 4 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 234மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.