பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை – தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

பொது இடங்களில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்துள்ள பம்மலில் பிரதானச் சாலையில் இறைச்சி மற்றும் தோல் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுவதாகச் செய்திகள் வெளியாகின. இதனைத் தாமாக முன்வந்து விசாரணை செய்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு, நகராட்சி ஆணையர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழு பம்மல் சுற்று வட்டாரத்தில் இறைச்சி மற்றும் தோல் கழிவுகள் கொட்டப்படுகிறதா? எனவும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Exit mobile version