பெரு நாட்டில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் போட்டி நடைபெற்றது.
வெளி நாடுகளில் புதிய புதிய பொருட்கள் , நவீன தொழில்நுட்பங்கள் கண்டுபிடித்து வருகின்றனர். மனிதர்கள் பொதுவாகவே பொழுதுபோக்கு அதிக முக்கியத்தும் கொடுப்பார்கள் , காரணம் தங்களின் வேலையினால் ஏற்படும் மன அழுத்ததை குறைக்க பல்வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்துவார்கள்.
வெறும் விளையாட்டாக பார்க்காமல். அதில் பணம் செலவிடுபவர்களும் உண்டு….அந்த வரிசையில் பெரு தலைநகர் லிம்மாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பலமாக அறைந்துகொள்ளும் போட்டி நடைபெற்றது. இதில் 16 பங்கேற்றுள்ளனர்..
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமெரிக்க மதிப்பில் 300 டாலர்கள் பரிசுத் தொகையாக கொடுத்துள்ளனர், இது இந்திய மதிப்பில் ரூ 21,300 ஆகும் . இந்த போட்டி முதன் முறையாக அமெரிக்காவில் தொடங்கியதாகவும் பின்னர் ரஷ்யாவில் பிரபலமானதாகவும் போட்டி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளனர்.