பாலாற்றில் 29 தடுப்பணைகளில் உயரத்தை உயர்த்த ஆந்திர அரசு பணிகளை செய்து வருவதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் நந்திதுர்கா என்ற இடத்தில் தொடங்கும் பாலாறு கர்நாடகாவில் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவில் 30 கிமீ தொலைவிலும், தமிழகத்தில் 140 கிலோ மீட்டர் தொலைவிலும் பயணிக்கின்றது. இந்நிலையில் கடந்த 1892ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையை மீறி, கர்நாடக அரசு 1000 ஏரிகளை கட்டி, பாலாற்று நீர் அண்டை மாநிலங்களுக்கு கிடைக்காமல் தடுத்தது. அதேபோல் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தமிழக-ஆந்திர எல்லையில் பாலாற்றில் 29 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியது.
இந்நிலையில் அந்த அணைகளின் உயரத்தை மேலும் உயர்த்த 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு நீர் கிடைப்பது மிகவும் கடினம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.