அடையாறில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான்

புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அடையாறு புற்றுநோய் மையம் மற்றும் ஜீவோதயா கருணை இல்லத்துடன் இணைந்து புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் என மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் பெறப்பட்ட நன்கொடைகள் அடையாறு புற்றுநோய் மையத்திற்கும், ஜீவோதயா கருணை இல்லத்திற்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version