நீலகிரி மாவட்டம் உதகையில் 124ஆவது மலர்க் கண்காட்சிக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உதகையில் இந்த ஆண்டுக்கான இரண்டாம் சீசன் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான முதல் சீசனுக்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை சீசன் களைகட்டத் தொடங்கும். இந்த மாதங்களில் சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்து செல்வர். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பூங்காவில் பல்வேறு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் முதற்கட்டமாக 124ஆவது மலர் கண்காட்சிக்காக 15 ஆயிரம் பூந்தொட்டிகளில், பல்வேறு வகை மலர்ச் செடிகளின் வித்துக்களை ஊன்றும் பணி நடைபெறுகிறது. அதேபோல், பூங்காவின் பல பகுதிகளில் மலர்ச் செடிகளை நடுவதற்கான பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.