நாமக்கல்லில் ,ஊரடங்கு நேரத்தை சாதகமாக்கி கொண்டு சம்பாதிக்கும் இளைஞர்கள்!!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள், கொரோனா ஊரடங்கால் வருவாய் இழந்த நிலையில், மனம் சோர்ந்து போகாமல் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டுள்ளனர்..

வீட்டில் இருந்து அதிகம் வெளியில் வந்து செல்ல முடியாதவர்கள் ஆகியோருக்கு அவர்கள் கேட்கும் மருந்து-மாத்திரைகள், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கும் தொழிலை மேற்கொண்டு அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

கொரோனாவால் வேலை இழந்து விட்டோம் என்று ஒருபுறம் முடங்கிக் கிடக்காமல், சுய தொழிலை தொடங்கி மிகக்குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கான சேவைகளை இந்த இளைஞர்கள் வழங்கி வருகின்றனர்.

அமேசான், பிலிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் சர்வதேச அளவில் செய்யும் தொழிலை, இவர்கள் மாவட்டத்திற்குள் செய்து வருகின்றனர்..பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் சேவைகள் குறித்து விளம்பரம் செய்து, அதன் மூலம் தொழிலை பெருக்கிக்கொள்கின்றனர்.

முதியவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை என்கின்றனர் இந்த இளைஞர்கள்.

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த இளைஞர்கள் வழங்கி வரும் சேவையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். புதிய முயற்சியாக கொரோனா தடைக்காலத்தில் தொடங்கப்பட்ட இத்தொழிலை இன்று முழுநேரத் தொழிலாக இளைஞர்கள் மாற்றிக் கொண்டுள்ளனர்.

Exit mobile version