காலை 9 மணிவரை நாகாலாந்தில் 21% வாக்குகள் பதிவாகியுள்ளன

மக்களவை தேர்தலில் முதற்கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. அந்த வகையில், ஆந்திராவில் 25, அருணாசல பிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்காரில் 1, காஷ்மீரில் 2, மராட்டியத்தில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குச் சாவடி மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துள்ளனர். நக்சலைட், மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரம்படி நாகாலாந்தில் 21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Exit mobile version