நாகலாந்தில் நாய் இறைச்சிக்கு அனுமதி! அரசின் தடையை ரத்து செய்த நீதிமன்றம்!

நாகலாந்தில் மாநில அரசு விதித்த தடை ஒன்றினை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அம்மாநில மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் குத்தாட்டம் போட வைத்துள்ளது. அது என்ன தீர்ப்பு என்பது குறித்து பார்ப்போம்..

கவுகாத்தி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று நாகலாந்து மக்களை ஆனந்தக் கடலில் திக்குமுக்காட வைத்திருக்கிறது. அப்படி என்ன தீர்ப்பு என்று தானே கேட்கிறீர்கள்… அது நாய் இறைச்சியை உண்ணலாம் என்பதுதான்.

என்னது, நாய் இறைச்சியா என்று உங்களுக்கு வேண்டுமானால் அது அசூயையாகத் தோன்றலாம் …. ஆனால், அது எங்களின் பாரம்பரிய உணவு… அதை எப்படி தடை செய்யலாம் என்று பொங்கி எழுந்த நாகர் பழங்குடியின மக்களின் போராட்டம் தற்போது வெற்றி அடைந்துள்ளது.

மசாஜ் என்றால் தாய்லாந்து நினைவுக்கு வருவது போல, நாய்க்கறி என்றால் நாகலாந்துதான் நினைவுக்கு வரும். நாய்க்கறிக்காகவே பிரத்யேக மார்க்கெட் அங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் ஜல்லிக்கட்டுக்கு எப்படி தமிழகத்தில் பீட்டா அமைப்பு தடைகோரியதோ அதே போன்று விலங்கின ஆர்வலர்கள் அங்கு நாய் இறைச்சிக்கு தடை கோர அந்தப் பிரச்சனை பூதாகரமான நிலையில், கடந்த 2020 ஜூலையில் நாய்க்கறிக்கு தடை விதித்தது மாநில அரசு.

இதனால் கொதித்தெழுந்த நாகலாந்து மக்கள், நாய்க்கறி எங்கள் உரிமை என்று வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட, அவர்களுக்கு ஆதரவாக நாய்க்கறி விற்பனையாளர்களும் சேர்ந்து கொள்ள, மாநில அரசின் தடையை எதிர்த்து கவுகாத்தி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. நாகலாந்து மக்கள் தங்கள் பாரம்பரியமான நாய்க்கறி சாப்பிட தடை எதுவும் கிடையாது. மாநில அரசு விதித்த தடை செல்லாது என்று கவுகாத்தி கோர்ட்டு உத்தரவிட உற்சாகக் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் நாய்க்கறி பிரியர்கள்.

என்னது நாய் லெக் பீஸ் பிரியாணி வேணுமாவா? ஆளை விடுங்க சாமி!

– ஆசாத்

 

 

Exit mobile version