மூணாரில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

மூணாரில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது…

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் சுற்றுலா தளமான மூணாரில் இதமான குளிர்ச்சி நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதன் காரணமாக ராஜமலை, குண்டலா, வட்டவடா போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மூணாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு படகு சவாரி மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Exit mobile version