மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி இன்று நிறைவடைந்தது. இதில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக மக்கள் நலனுக்காக அறிவித்தார்.
இந்நிலையில் கடைசி நாளான இன்று சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைந்ததும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் மெரினா கடற்கரையிலுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.