மணிப்பூரில், யோகாசனப் போட்டியை ஆளுநர் தொடங்கி வைத்தார்

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மாநில அளவிலான யோகாசனப் போட்டிகளை ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா தொடங்கி வைத்தார். மணிப்பூர் மாநிலத்தில் ஆண்டுதோறும் யோகாசனப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 24ஆவது ஆண்டாக நடைபெறும் போட்டியை ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் இரு பாலினத்தாருக்கும் வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்குப் பணப் பரிசும் கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. முதல் நாளில் நடைபெற்ற போட்டியில் சிறுவர் சிறுமியரின் யோகாசனப் பயிற்சிகள் பார்வையாளர்களை வியப்படையச் செய்யும் வகையில் இருந்தன.

Exit mobile version