மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இன்று ஆலோசனை

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக சிவசேனாவுடன் கூட்டணியை உறுதி செய்ய தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடிக்கிறது. இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காததால் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. மகராஷ்டிரா அரசியல் குழப்பத்திற்கு, சரத் பவார் – சோனியா காந்தி சந்திப்பிற்கு பிறகு முற்றுப்புள்ளி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு நடத்தவில்லை என்ற சரத் பவாரின் கருத்தால் குழப்பம் நீடித்தது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். இதில் சிவசேனாவுடன் கூட்டணியை உறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version