மதுரையில் மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து கின்னஸ் சாதனை

மதுரையில் ஏழாயிரம் மாணவர்கள் ஒன்று கூடி மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்த ஓவிய போட்டியில் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்…

மதுரையில்  ஏழாயிரம் மாணவர்கள்   பங்கேற்கும் கின்னஸ் ஓவிய போட்டி ஏற்பாடு செய்யபட்டது. மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் மாணவர்கள் அனைவரும் மரம் வளர்ப்பு குறித்த ஒரே மாதிரியான ஓவியத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரைந்து முடித்தனர். இந்த சாதனை நிகழ்ச்சியில் ஏழாயிரம் மாணவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்து தங்களின் சாதனையை நிறைவேற்றினர். இதற்கு முன்பாக நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பள்ளி ஒன்று 2,000 மாணவர்களைக் கொண்டு இதுபோன்ற சாதனையை நிகழ்த்தியதாக கூறப்படும் நிலையில் 7 ஆயிரம் மாணவர்களை வைத்து மதுரை பள்ளி நடத்திய இந்த சாதனை கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version