மதுரையில், வீடு புகுந்து பெண் ஒருவரை சராமாரியாக வெட்டி படுகொலை செய்த பிரபல ரவுடி அருவா சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த மலர்கொடி அவரது தங்கை சீத்தாலட்சுமி, மகன் சுரேஷ் உடன் வசித்து வந்தார். இந்தநிலையில், மலர்கொடி வீட்டிற்குள் புகுந்த பிரபல ரவுடி அருவா சுரேஷ், அவர்களை அரிவாளால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மலர்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுரேஷ் படுகாயங்களுடன், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர தாக்குதலுக்கு, ரவுடி அருவா சுரேஷின் மனைவி, அவரைவிட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், மனைவி எங்கே இருக்கிறார் என்பது குறித்து மலர்கொடியிடம் அருவா சுரேஷ் சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக போலீசாரின் முதல் கட்ட விசாணையில் தெரியவந்துள்ளது. அருவா சுரேஷை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.