மதுரையில் பேரிடரின் போது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு

பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சியை பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

நீர் நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. முதல் முறையாக மதுரையில் நடைபெற்ற முகாமை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

குளம், குட்டை, ஆழ்துளை கிணறு, பாதாள சாக்கடை, கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் வெள்ளம், புயல் , தீ விபத்து போன்ற பேரிடர்களிலிருந்து தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும்
பத்திரமாக பாதுகாத்துக் கொள்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் வருவாய் நிருவாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version