சென்னை கொடுங்கையூரில் கழிவுநீரைச் சுத்திகரித்துத் தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கு வழங்கும் 348 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.
சென்னையில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையைக் போக்கும் வகையில் கழிவுநீரைச் சுத்திகரித்துத் தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொடுங்கையூரில் 348 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையைத் திறந்து வைத்துத் தொழிற்சாலைப் பயன்பாட்டுக்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்தையும் தொடங்கிவைத்தார். இந்தக் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து நாள்தோறும் நாலரைக் கோடி லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து வழங்கப்படும்.