கீழடியில், சுடுமண் குழாய்கள், வடிகட்டி கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 5வது கட்ட அகழாய்வின் போது, இரண்டு சுடுமண் குழாய்களும், வடிகட்டி போன்ற அமைப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடியில், மத்திய, மாநில தொல்லியல் துறையின் சார்பாக 5ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இந்த அகழாய்வில், சிவப்பு வண்ணத்தில் செம்மையாக வடிவமைக்கப்பட்டுள்ள 2 சுடுமண் குழாய்களும், வடிகட்டி போன்ற அமைப்பும் கண்டறியப்பட்டது. 2ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம், நீர் வடிகால் அமைப்பு தொட்டி போன்ற அமைப்பின் தொடர்ச்சி தற்போது கிடைத்துள்ளது.

சுருள் வடிவிலான சுடுமண் குழாயின் கீழே, பீப்பாய் வடிவிலான மூன்று சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று பொருத்திய நிலையில் கண்டறியப்பட்டது. கீழடுக்கில் பீப்பாய் குழாயின் நுழைவுப் பகுதியில் வடிகட்டி ஒன்று பொருத்தபட்டுள்ளது. இந்த வடிகட்டியின் நான்கில் மூன்று பாகங்கள் மட்டுமே கிடைக்க பெற்றுள்ளன. இதன் மூலம், 6ஆம் நூற்றாண்டில் நீர் மேலாண்மை சிறந்து விளங்கியதாகவும், இவை முதிர்ச்சியடைந்த சமூகத்தின் முன்னேறிய தொழிலநுட்ப வளர்ச்சி என்பதை பறைசாற்றவதாகவும், தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version