கீழடியில் கிடைத்ததை போல் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உறை கிணறு ஒன்று, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாம்பு விழுந்தான் கிராமத்தில் உள்ள ராக்கப்பெருமாள் கோவிலை புனரமைக்கும் பணிக்காக மணல் அள்ளிய போது மண்ணுக்கு அடியில், உறை கிணறு ஒன்று இருப்பது கண்டறியப் பட்டது. இதனை ஆய்வு செய்த வரலாற்று ஆர்வலர்கள், தடித்த ஓடுகளால் வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த உறை கிணறு சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிவித்துள்ளனர். இந்த பகுதி கீழடியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் வைகை நாகரீகத்துடன் தொடர்புடைய கீழடியை போன்று சம காலத்தை ஒட்டிய பழமையான உறை கிணறாக இது இருக்கலாம் என கருதப்படுகிறது. தொல்லியல் துறையினர் உடனடியாக இந்த இடத்தில் அகழாய்வு பணிகள் நடத்த வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.