காஷ்மீரில் இருந்து ஊடுருவ முயன்ற பாகிஸ்தான்: இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இருந்து ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் அதிரப்படையினரைக் குண்டு வீசி இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர்.

செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான ஹாஜிப்பூரில், பாகிஸ்தான் அதிரடிப்படையினர் ஊடுருவியதாக இந்திய ராணுவத்திற்குத் தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினர், ஊடுருவியுள்ள அனைவரையும் கண்டுபிடித்து, எறிகுண்டுகளை வீசி விரட்டியடித்தனர். இதன் மூலம் பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 15 ஊடுருவல்கள் இந்திய ராணுவதினரால் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடும் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்ப முயன்று வருகிறது.

Exit mobile version