ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன ஆறு காவலர்கள் உட்பட 10 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குல்காம் மாவட்டம் ஜவஹர் சுரங்கப்பாதை அருகே, பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது, பணியில் இருந்த 6 காவலர்கள் உள்பட 10 பேர் பனியில் புதைந்தனர். அவர்களை மீட்கும் பணிகளில், தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடும் பனிப்பொழிவால் ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக மூடப்பட்டிருக்கிறது.
ராஜவுரி, குல்காம் மாவட்டங்களில் கடும் குளிர் நிலவுகிறது. 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் பனிச்சரிவு மற்றும் கடும் பனிப்பொழிவு அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் பயணத்தை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.