கர்நாடகாவில், விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற ஆறு சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி பலி

கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பின் போது ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகர் சிலைகளை கரைத்தனர். அப்போது காவல்துறையினர் போட்டிருந்த தடுப்புகளையும் மீறி 8 சிறுவர்கள் சிலையை எடுத்துக் கொண்டு ஏரிக்குள் இறங்கியபோது, எதிர்பாரத விதமாக ஆழமாக தூர் வாரப்பட்ட இடத்திற்கு சென்றவர்கள், தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதனை கண்ட அக்கபக்கத்தினர் தண்ணீரில் இறங்கி சிறுவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் மூச்சு திணறல் காரணமாக சம்பவ இடத்திலேயே 6 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு சிறுவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version