கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவதைத் தடுக்க, பெங்களூருவில் இருக்கும் ரிசார்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்து வந்த 2 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் அண்மையில் தங்களின் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதில் சங்கர் என்ற எம்.எல்.ஏ. மீண்டும் காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
79 பேரில், 75 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இதில் பங்கேற்றனர். இதனால் குமாரசாமி அரசுக்கு ஆபத்து நீடிக்கிறது. கூட்டத்தில் பங்கெடுக்காத எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு 70 கோடி வரை பாஜகவினர் குதிரை பேரம் பேசியதாகவும் சித்தராமையா குற்றம்சாட்டினார். இந்தநிலையில், குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 75 பேரும் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.