கர்நாடகாவில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்

கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட 15 பேர் முதலமைச்சர் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

கர்நாடகத்தில் குமாரசாமி முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 17பேர் அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் 17பேரையும் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். அத்துடன் நடப்பு சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை 17 பேரும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 17 பேரும் தொடுத்த வழக்கில், பதவியில் இருந்து நீக்கியது சரியே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 17 பேரும் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்றும் அறிவித்தது. இந்நிலையில் பதவி நீக்கப்பட்டவர்களில் 15 பேர் பெங்களூரில் இன்று முதலமைச்சர் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர்.

Exit mobile version