கன்னியாகுமரியில் ஒரே நாளில் ஆயிரத்து 912 வழக்குகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் ஒரே நாளில் ஆயிரத்து 912 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விதிமீறல்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுதும் காவலர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து காவலர்கள் வாகன சோதனையை கடுமையாக்கினர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட காவலர்கள் மேற்கொண்ட சோதனையில் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், உரிய ஆவணங்களின்றி மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆயிரத்து 912 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வாகன சோதனையின் மூலம் 21 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த தொடர் வாகன சோதனைகளால் போக்குவரத்து விதி மீறல் கட்டுக்குள் வந்துள்ளதாக போக்குவரத்து காவலர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version