ஆந்திர மாநிலம் கடப்பாவில் நிலத்தை தோண்டத் தோண்ட 54 நாட்டு வெடிகுண்டுகள் கிடைத்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் முத்தனுறு சாலை பகுதியில், புருஷோத்தம் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு வீட்டு மனை பட்டா அமைக்க ரியல் எஸ்டேட் முகவர்கள் பொக்லைன் உதவியோடு நிலத்தை தோண்டியுள்ளனர். அப்போது வாளி ஒன்று வெளியே வந்ததால் சந்தேகமடைந்த ரியல் எஸ்டேட் முகவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, வாளியில் நான்கு நாட்டு வெடிகுண்டு இருப்பதை கண்டறிந்தனர். அந்த பகுதியில் தொடர்ந்து சோதனை மேற்கொண்ட போது, மொத்தமாக 54 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், பொதுமக்களை அப்புறப்படுத்தி அப்பகுதியை முழுவதும் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். அந்த வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்ததை அடுத்து, இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.