ஜப்பானில் புதிய மன்னராக நருஹிட்டோ மன்னராக பதவியேற்றார்.
ஜப்பான் நாட்டின் 125வது மன்னர் அகிஹிட்டோ உடல்நல குறைவின் காரணமாக பதவி விலகுவதாக விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து அவரது மகன் நருஹிட்டோ புதிய மன்னராக இன்று பொறுப்பேற்றார். டோக்கியோவில் இள்ள இம்பீரியல் அரண்மனையில் மன்னர் அகிஹிட்டோவின் பதவி விலகல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், ஜப்பான் நாட்டின் மன்னராக இருந்ததற்காக பெருமை கொள்வதாக தெரிவித்தார். இதனையடுத்து மன்னர் அகிஹிட்டோவின் மூத்த மகனான பட்டத்து இளவரசர் நருஹிட்டோ புதிய மன்னராக பதவியேற்றார். இதைமுன்னிட்டு, ஜப்பான் வரலாற்றில் முதன் முறையாக 10 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1817 ஆம் ஆண்டில் பதவி விலகிய கொகைக்கு என்ற மன்னருக்கு பிறகு 200 ஆண்டுகளுக்கு பிறகு பதவி விலகும் முதல் மன்னர் அகிஹிட்டோ என்பது குறிப்பிடத்தக்கது.