ஜம்மு, காஷ்மீரில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் சோபியான் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் அங்குள்ள சோபியான் பகுதியில் பதுங்கியிருந்தனர். இவர்கள் திடீரென இரவில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் பதிலடி நடத்தினர்.

இதில், தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இருதரப்பிற்கும் இடையே சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version