2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஹாக்கி உலக கோப்பை போட்டியை இந்தியா நடத்த உள்ளதாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆண்கள் ஹாக்கி உலக கோப்பைக்கான போட்டிகள் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா இந்த வாய்ப்பை பெற்றுள்ளதாக கூறியுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை அடுத்து வெளியிடப்படும் தரவரிசை பட்டியலை பொறுத்து அணிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், அதன் பிறகு தகுதி சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டு அண்களின் போட்டி அட்டவனை வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா, ஆண்கள் ஹாக்கி உலக கோப்பை போட்டியை 4 வது முறையாக நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 2022 ஆம் ஆண்டு நடைபெறும் பெண்கள் ஹாக்கி உலக கோப்பை போட்டியை ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து, மலேசியா, நியூஸிலாந்து ஆகிய 5 அணிகள் இணைந்து நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.