இந்தியாவிலேயே மாணவர்களுக்கு சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக்கொண்டு 5 பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்து 657 மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அதிக கல்வி வசதிகளை பெற்றதாக தெரிவித்துள்ளார். மாணவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விழுப்புரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 829 மடிக்கணினிகள் , 22 கோடியே 23 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.