தேனியில் அ.தி.மு.க. தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்

தேனியில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பூத் கமிட்டி செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

தேனியில் நடைபெற்ற அ.தி.மு.க. தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேனி தொகுதியில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமார், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் மயில்வேல், மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் லோகிராஜன் ஆகியோரை அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க பூத் கமிட்டியினர் அல்லும், பகலும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Exit mobile version