அரியானாவில் 11.30 மணி வரை 15% வாக்குகள் பதிவாகியுள்ளன

பதினொன்றரை மணி நிலவரப்படி அரியானா மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் 15 விழுக்காடும், மகாராஷ்டிர மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் 22 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 11.30 மணி நிலவரப்படி அரியானாவில் 15 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 11.30 மணி நிலவரப்படி 22 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

Exit mobile version