ஜிஎஸ்டி வசூலில் மீண்டும் மந்த நிலை : மத்திய நிதி அமைச்சகம்

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 95 ஆயிரத்து 380 கோடி ரூபாயாக மீண்டும் குறைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு அக்டோபரில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 95 ஆயிரத்து 380 கோடி ரூபாயாக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் 91 ஆயிரத்து 916 கோடியாகவும், 2018ம் ஆண்டு அக்டோபரில் ஒரு லட்சத்து 710 கோடி ரூபாயகவும் காணப்பட்டது. அக்டோபர் மாத மொத்த ஜிஎஸ்டி வசூலில், சிஜிஎஸ்டி 17ஆயிரத்து 582 கோடியாகவும், எஸ்ஜிஎஸ்டி 23 ஆயிரத்து 674 கோடியாகவும், ஐஜிஎஸ்டி 46 ஆயிரத்து 517 கோடியாகவும், தீர்வை 7 ஆயிரத்து 607 கோடி ரூபாயகவும் இருந்தன. செப்டம்பருக்கான ஜிஎஸ்டிஆர் 3பி படிவங்களை தாக்கல் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 73 லட்சத்து 83 ஆயிராம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தைவிட, இந்தாண்டு அக்டோபரில் 5.29 சதவீதம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version