பரமத்திவேலூர் வட்டாரத்தில் பொங்கலை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்…
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்தில் உள்ள பிலிக்கல்பாளையம், சோழசிராமணி, ஜேடர்பாளையம் உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகள் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்குக் கரும்பைப் பிழிந்து சாறெடுத்துக் காய்ச்சி அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவை தயார் செய்யப்படுகிறது. பொங்கலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்குத் தயாரிக்கப்படும் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ஆயிரத்து 300 ரூபாய்க்கும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.