பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரேக்ளா பந்தயத்துக்காக, நாட்டு இன காளைகளை தயார்படுத்தும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயத்துக்காக காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், பொங்கலை முன்னிட்டு நடைபெறவிருக்கும் ரேக்ளா பந்தயத்துக்காக, காளைகள் மற்றும் வண்டிகளை தயார் படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விளைநிலத்தில் மாடுகளை உழவு பணியில் ஈடுபடுத்துவது, நீச்சல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பயிற்சிகளுடன், மாடுகளுக்கு சத்தாண உணவும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு பருவமழை அதிகளவு பெய்ததால், விவசாயம் செழித்து காணப்படுகிறது, பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.