சென்னையை அடுத்த வண்டலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்காவில் உள்ள புலிக்குட்டிகளை பெரிய திரையில் பார்த்து மகிழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 27 புலிகள் உள்ளன. அவற்றுள் ஆதித்யா மற்றும் ஆர்த்தி என்ற புலிகளுக்கு இரண்டு குட்டிகள் உள்ளன. இவை இரண்டும் தொடர்ந்து தாய் புலி மற்றும் மருத்துவக் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் இந்த
புலிக்குட்டிகளையும் அவற்றின் விளையாட்டையும் கண்டுகளிக்க, பெரிய திரை ஒன்று பூங்கா
வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் யானைகளுக்கு கரும்புகள் வழங்கவும், பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் காலை 11 மணி மற்றும் மதியம் 3 மணியளவில் யானையை காண சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.மேலும் காணும் பொங்கல் அன்று பார்வையாளர்கள் குடும்பத்துடன் பூங்காவிற்கு வந்து செல்ல 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.